செய்திகள்,திரையுலகம் 87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் – ஒரு பார்வை…

87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் – ஒரு பார்வை…

87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் – ஒரு பார்வை… post thumbnail image
ஹாலிவுட்:-சினிமா துறையில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஹாலிவுட்டை சேர்ந்த பல திரைபிரபலங்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. முதலில் ஹாலிவுட் பிரபலங்கள் மெரைஸ், ஸ்டீரிப், ஜெனிபர் ஹட்சன் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின் ஒவ்வொரு விருதாக அறிவிக்கப்பட்டது.

பேர்ட்மேன் படத்திற்கு நான்கு விருதுகள்:-
அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு இயக்கிய, பேர்ட்மேன் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.

தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் நான்கு விருதுகள்:-

இதேபோல், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்-அப், சிறந்த இசை மற்றும் சிறந்த தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் நான்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. 87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் இதோ..
சிறந்த படம் : பேர்ட்மேன்

சிறந்த நடிகர் : எடி ரெட்மெய்ன் (படம்: தி தியரி ஆப் எவரிதிங்)

சிறந்த நடிகை : ஜூலியானே மூரே (படம்: ஸ்டில் அலைஸ்)

சிறந்த துணை நடிகர் : ஜே.கே.சிம்மோன்ஸ் (படம்: விப்லாஸ்)

சிறந்த துணை நடிகை : பேட்ரிசியா ஆர்குட்டே (படம்: பாய்ஹுட்)

சிறந்த அனிமேஷன் படம் : பிக் ஹீரோ 6

சிறந்த ஔிப்பதிவு : இம்மானுவேல் லுபெஸ்கி (படம்: பேர்ட்மேன்)

சிறந்த படத்தொகுப்பு : ஜோயல் காக்ஸ் அண்ட் கேரி டி.ரோச் (படம் : அமெரிக்கன் ஸ்னிப்பர்)

சிறந்த ஆடை வடிவமைப்பு : மிலினா கொனாரியோ (படம் : தி கிராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்)

சிறந்த இயக்குநர் : அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு (படம் : பேர்ட்மேன்)

சிறந்த டாக்குமென்ட்ரி படம் : சிட்டிசன்ஃபோர்

சிறந்த வௌிநாட்டு படம் : இடா

சிறந்த இசை : அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் (படம் : தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்)

சிறந்த மேக்க அப் : பிரான்சிஸ் ஹனான் மற்றும் மார்க் கொலியர் (படம் : தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்)

சிறந்த இசை(ஒரிஜினல்) : ஷான் பேட்டர்சன் (எவரிதிங் இஸ் ஆஸம் ப்ரம் தி லியோ மூவி)< சிறந்த அனிமேஷன் குறும்படம் : ஃபீஸ்ட் சிறந்த குறும்படம் : தி போன் கால் சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ஆலன் ராபர்ட் முரே மற்றும் பப் அஸ்மேன் (படம் : அமெரிக்கன் ஸ்னிப்பர்) சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : கிரிக் மேன், பென் வில்கின்ஸ் மற்றும் தாமன் கர்லே (படம் : விப்லாஸ்) சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : பால் பிராங்கிளின், ஆண்ட்ரூ லாக்லி, இன் ஹன்டர் மற்றும் ஸ்காட் பிஷ்ஷர் (படம்: இன்டர்ஸ்டெல்லர்) சிறந்த கதை : கிராகம் மூரே (படம்: தி இமிடேசன் கேம்) சிறந்த திரைக்கதை : அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு (படம்: பேர்ட்மேன்)

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி