செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…

ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!…

ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம்!… post thumbnail image
பெங்களூர்:-8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளும் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 44 பேர் அடங்குவார்கள். கழற்றி விடப்பட்ட வீரர்களையும், புதிய வீரர்களும் ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் இடம் பெற்றனர்.

ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடந்தது. 2011 உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதை பெற்ற அதிரடி வீரர் யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு ஏலம் போனார். டெல்லி டேர்டெவலஸ் அணி அவரை எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.2 கோடியாகும். 8 மடங்கு அதிகமாக அவர் விலை போனார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் யுவராஜ்சிங்கை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.14 கோடிக்கு எடுத்தது. சரியாக சோபிக்காததால் அவரை கழற்றி விட்டது. அவர் அதை விட மேலும் ரூ.2 கோடிக்கு ஏலம் போய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி