அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…

இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…

இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!… post thumbnail image
லக்னோ:-மகாத்மா காந்தியை ‘தேச பக்தர்’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சையில் சிக்கி, பின்னர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. எம்.பி.யான சாக்‌ஷி மஹராஜ், உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் நேற்று நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசியதாவது:- நாம் இருவர்-நமக்கு ஒருவர் என்ற முழக்கத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இதில் திருப்தியடையாத ஒரு கும்பல் ‘நாம் இருவர்-நமக்கு —’ என்றொரு புதிய முழக்கத்தை தற்போது எழுப்பி வருகின்றனர்.

பெண்ணோடு பெண்ணும், ஆணோடு ஆணும் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். கடந்தகால அரசும் இதையே செய்தது. எனவே, நமது பெண்கள் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு குழந்தையை சாதுவாக்கி விடுங்கள். ஒரு குழந்தையை தர்மவானாக்கி விடுங்கள். தற்போது எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடைபெறுவதால் ஒரு குழந்தையை எல்லைப்பகுதிக்கு அனுப்புங்கள். ஒரு குழந்தையை மட்டும் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இவரது இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொட்ர்பாளர் அபிஷேக் சிங்வி, இந்தியாவின் மக்கள் தொகை கொள்கை மாறி விட்டதா? என்பது தொடர்பாக இந்த நாடு பதில் அறிய விரும்புகின்றது. இந்த பேச்சு வெளியாகி 24 மணிநேரம் ஆகியும் பிரதமர், பா.ஜ.க. தலைவர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் இன்னும் மவுனமாக இருப்பது ஏன்? இதுதான் புதிய மக்கள் தொகை கொள்கையா? என்பதை அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது. ஆனால், இதற்கு பதில் வராது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி