செய்திகள்,திரையுலகம் நடிகை அமலா பாலுக்கு தனுஷ் கல்தா!…

நடிகை அமலா பாலுக்கு தனுஷ் கல்தா!…

நடிகை அமலா பாலுக்கு தனுஷ் கல்தா!… post thumbnail image
சென்னை:-‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தில் ஜோடி போட்டனர் தனுஷ். அமலா பால். படம் ஹிட்டானதுடன் விநியோகஸ்தர்களும் நல்ல லாபம் பார்த்தனர். இதே டீமை வைத்து புதிய படம் தயாரிக்க முடிவு செய்தார் தனுஷ். ஏற்கனவே ராசியான ஜோடியாக அமைந்த அமலா பாலை மீண்டும் ஒப்பந்தம் செய்ய ஆலோசிக்கப்பட்டதுடன் மற்றொரு ஹீரோயினாக எமி ஜாக்சன் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமலா பால் திருமணம் செய்துகொண்டு செட்டிலானாலும் படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை. ஆனால் திருமணம் ஆன ஹீரோயினை மீண்டும் ஜோடியாக்கிக்கொள்ள தனுஷ் டீம் ஆட்சேபனை செய்தது. இதையடுத்து அவருக்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஜோடியாக இருந்தாலும் பொருத்தமாகவும், பிஸ்னஸ் பேசுவதற்கு வசதியாகவும் இருக்கும் என்று டீமும் கருத்து தெரிவித்ததையடுத்து இந்த செட்டப்புடன் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி