செய்திகள்,திரையுலகம் தென்னிந்திய ஹீரோக்களை புறக்கணிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!…

தென்னிந்திய ஹீரோக்களை புறக்கணிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!…

தென்னிந்திய ஹீரோக்களை புறக்கணிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!… post thumbnail image
மும்பை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்‘ படத்துக்கு முதலில் அலியா பட்டிடம் பேசினார் இயக்குனர். சாக்குபோக்கு சொல்லிக்கொண்டே இருந்த அலியா பட் கடைசியில் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். இதையடுத்து அமைரா தஸ்தூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் ‘இஸ்க்‘ படம் மூலம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்.

நாகார்ஜூனா-அமலா மகன் அகில் தெலுங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். வி.வி.வினாயக் இயக்குகிறார். பாலிவுட்டில் இளசுகளின் மனதை கவர்ந்திருக்கும் அலியா பட்டை அகில் ஜோடியாக்கலாம் என முடிவு செய்து அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தனுஷுக்கு கைவிரித்ததுபோலவே அகிலுக்கும் கைவிரித்துவிட்டார். அவர் கைநழுவவிட்ட இரண்டாவது வாய்ப்பும் மீண்டும் அமைரா தஸ்தூரையே தேடி சென்றிருக்கிறது. தென்னிந்திய ஹீரோக்களுக்கு பிடிகொடுக்காமல் அலியாபட் டிமிக்கி தருவது ஏன்?… என்று விசாரித்தபோது,

தென்னிந்திய படங்களில் நடிப்பது வேஸ்ட். அதில் ஹீரோக்களுக்கு மட்டும்தான் நடிக்க வாய்ப்பிருக்கும். அவர்களுடன் ஒன்றிரண்டு டூயட் பாடி கவர்ச்சி காட்டுவதைத்தவிர ஹீரோயின்களுக்கு வேறு வேலை இருக்காது. அதுபோன்ற கதைகளை ஒப்புக்கொள்ள நான் தயாராக இல்லை. எனவேதான் சவுத் படங்களில் நடிப்பதை தவிர்க்கிறேன் என்று கூறுகிறாராம் அலியாபட். தென்னிந்திய படங்கள் பல இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதை அலியா பட் பார்த்தால் தென்னிந்திய படங்களை இப்படி குறை சொல்ல மாட்டார் என்று உர்ரான சில கோலிவுட் இயக்குனர்கள் அலியாவுக்கு டோஸ் விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி