செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ திரைப்படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!…

‘லிங்கா’ திரைப்படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!…

‘லிங்கா’ திரைப்படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் ‘லிங்கா’. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ‘லிங்கா’ படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ. 60 கோடி வசூலித்து உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும் அனைவராலும் சொல்லப்பட்ட விஷயம் படத்தின் நீளம்தான். ஆதலால் படத்தின் நீளத்தை குறைக்க படக்குழுவினர் தீர்மானித்தனர். எனவே, முன்பாதியில் 6 நிமிடங்களும், பின்பாதியில் 4 நிமிடங்களும் என மொத்தம் 10 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி