செய்திகள்,விளையாட்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!…

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் கேப்டன் டோனி!… post thumbnail image
அடிலெய்டு:-இந்திய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 9ம் தேதி தொடங்குகிறது.

கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்த இந்திய அணி கேப்டன் டோனி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதல் டெஸ்ட் போட்டி தள்ளி போனதால் கேப்டன் டோனி இந்த வாரத்தில் இந்திய அணியினருடன் இணைவார் என்று தெரிகிறது. டோனி அணியினருடன் இணைவதால், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என்ற ஆசையுடன் ஆஸ்திரேலியா சென்ற விராட் கோலியின் கனவு கலைந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு கேப்டன் டோனி இந்திய அணியினருடன் இணைவார் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பாபா உறுதி செய்துள்ளார். இதற்கிடையில் டெஸ்ட் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டதால் 3 நாடுகள் போட்டிக்கு இந்திய அணி தயாராக வசதியாக போட்டி அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜனவரி 16-ந் தேதி நடக்க இருந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி ஜனவரி 18-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந் தேதி நடைபெற இருந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டம் முன்னதாக ஜனவரி 16-ந் தேதி நடத்தப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி