அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்க நகரங்களில் பரவும் கலவரம்!…

கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்க நகரங்களில் பரவும் கலவரம்!…

கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்க நகரங்களில் பரவும் கலவரம்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் மிசவுரி மாகாணம், பெர்குசானில் கடந்த ஆகஸ்டு மாதம் 9ம் தேதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என பெரு நடுவர் குழு 24ம் தேதி தீர்ப்பு அளித்தது, ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட பிரவுனின் குடும்பத்தினர், பெரு நடுவர்கள் குழுவின் தீர்ப்பு, அநீதியானது என கூறினர். அதே நேரத்தில் இதையொட்டி நடந்து வருகிற கலவரங்களுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரச்சினைக்குரிய போலீஸ் அதிகாரி டேரன் வில்சன், எனது மனசாட்சி தெளிவாக உள்ளது. நான் என் கடமையைத்தான் செய்தேன் என கூறினார். இதற்கிடையே சம்பவம் நடந்த பெர்குசானில் கலவரம் நடந்து வருகிறது. கலவரக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். அங்கு ஒரு கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 12 வணிக கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன. பல வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர் பதற்றம் காரணமாக அங்கு 2 ஆயிரத்து 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலும், பெருநடுவர்கள் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே கலவரங்களும் மூண்டு வருகின்றன. சுமார் 170 நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதாக சி.என்.என். டெலிவிஷன் கூறுகிறது. பாலங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். ஓக்லேண்டில், சான்பிரான்சிஸ்கோ பகுதியில் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினர். வணிக நிறுவனங்களும் தப்பவில்லை. அங்கு சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் போலீசார் திணறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பெர்குசானில் 61 பேர், செயிண்ட் லூயிஸ் நகரில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போலீஸ் தலைமையகம் முன்பாக மறியல் போராட்டம் அமைதியான முறையில் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. பாஸ்டனில் மக்கள் வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்த விவகாரத்தில் வன்முறை போராட்டங்கள் நடந்து வருவதற்கு ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், கலவரங்களில் ஈடுபடுகிற குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், மக்கள் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி