செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…

பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…

பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!… post thumbnail image
மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் 2013–14–ம் ஆண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுளார்.

அவர் 2013–14–ம் ஆண்டு சீசனில் 7 டெஸ்டில் 22 விக்கெட், 263 ரன், 22 ஒருநாள் போட்டியில் 17 விக்கெட், 7 இருபது ஓவர் போட்டியில் 7 விக்கெட் எடுத்து உள்ளார். அவருக்கு பாலி உம்ரிகர் விருது வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி