அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…

கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…

கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!… post thumbnail image
வாரணாசி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பட்டு ஜவுளிக்கு பிரசித்தி பெற்ற வாரணாசியில் மத்திய ஜவுளித்துறை சார்பில் ரூ.147 கோடி செலவில் அமைக்கப்படும் நெசவாளர் வர்த்தக மையம், கைவினைப் பொருட்கள் அருங்காட்சியகம், விசைத்தறி சேவை மையம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் வாரணாசி தொகுதியில் ஜெயாப்பூர் கிராமத்தை மோடி தத்தெடுத்தார்.2–ம் நாளான இன்று காலை பிரதமர் மோடி கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக வாரணாசியில் கங்கை நதி ஓடும் ‘அச்சிகாட்’ என்ற இடத்துக்கு காரில் வந்து இறங்கினார்.கங்கைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். அதன் பிறகு கங்கை ஆற்றில் சிறிது தூரம் மணலில் நடந்து சென்றார். அங்கு பெரிய மண் குவியல் இருந்தது.

மண் குவியலை நெருங்கிய பிரதமர் மோடி நன்கு குனிந்து மண்வெட்டி பிடித்து மண்ணை அள்ளிப் போட்டார். கைதேர்ந்த தொழிலாளி போல் மண்வெட்டியை லாவகமாக பிடித்து மண்ணை அள்ளிப் போட்டார். இதைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அதிசயத்துப் போனார்கள்.பின்னர் நிருபர்களிடம் பேசிய மோடி, நான் இன்று கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்துள்ளேன். இது மற்றவர்களையும் இந்தப்பணியில் ஈடுபட வைக்கும் தூண்டு கோலாக இருக்கும் என்றார். மோடி மேலும் கூறுகையில், இந்த வாரணாசி அச்சிகாட் பகுதி இன்னும் ஒரு மாதத்தில் சுத்தப்படுத்தப்படும் என்று உறுதி கூறுகிறேன் என்றார்.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்துக்காக 9 பேர் குழுவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதில் உ.பி. முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ், நடிகரும் அரசியல்வாதியுமான மனோஜ் திவாரி, எழுத்தாளர் மனிர்மா, கிரிக்கெட் வீரர்கள், முகமது கயீப், சுரேஷ் ரெய்னா, நகைச்சுவை நடிகர் ராஜீ ஸ்ரீவத்சவா, பின்னணி பாடகர் கைலாஷ் கேர், சித்ரகோட் பல்கலைக் கழக துணை வேந்தர் ராம்பத்ராசார்யா, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பேராசிரியர் தேவி பிரசாத் திவேதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பின்னர் பிரதமர் மோடி வாரணாசியில் மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி