செய்திகள்,திரையுலகம் காமெடியனாக நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு!…

காமெடியனாக நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு!…

காமெடியனாக நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு!… post thumbnail image
சென்னை:-எல்லாம் அவன் செயல், அழகர்மலை, புலிவேசம், ஜில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்கே. இவர் தற்போது என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தை மலையாள இயக்குனர் ஷாஜிகைலாஷ் இயக்குகிறார்.

இந்நிலையில், என் வழி தனி வழி படத்தில் நடிப்பதற்கு வடிவேலுவிடம் கேட்டாராம் ஆர்கே. ஆனால் அவரோ தான் ஹீரோவாகி விட்டதை சொல்லி, மீண்டும் காமெடியனாக நடிக்க சாத்தியமில்லை என்று கூறி விட்டாராம். அதனால்தான் இப்போது சிங்கமுத்து-தம்பி ராமைய்யா இருவரையும் இணைத்து ஒரு காமெடி கூட்டணி உருவாக்கியிருக்கிறார் ஆர்கே.

இதுபற்றி ஆர்கே கூறுகையில், என் படங்களில் எப்போதுமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியும் பேசப்படும் வகையில் அமைந்திருக்கிறது. சிங்கமுத்து, தம்பி ராமைய்யா இருவருமே ஏற்கனவே பெரிய காமெடி நடிகர்கள் என்பதால் செம கலக்கு கலக்கியிருக்கிறார்கள். வண்டு முருகன் கேரக்டர் எப்படி இப்போது நினைத்தாலு சிரிப்பை மூட்டுகிறதோ அதேமாதிரி இந்த படத்தின் காமெடியும் நீண்டகாலம் பேசப்படக்கூடியதாக இருக்கும் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி