செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ ரிலீஸ் காரணமாக கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு!…

‘ஐ’ ரிலீஸ் காரணமாக கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு!…

‘ஐ’ ரிலீஸ் காரணமாக கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தின் ரிலீஸ் தீபாவளியன்றுதான் இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் படம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருப்பதாகவும் சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், படத்தின் வேலைகள் பெரும்பாலான விதத்தில் முடிந்த விட்ட நிலையில் தள்ளிப் போகவும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.கேரளாவைப் பொறுத்தவரையில் ‘ஐ’ படம் தமிழிலேயே அதிக இடங்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

மலையாள முன்னணி நடிகரான சுரேஷ் கோபியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவருக்கிருக்கும் ரசிகர்களாலும் இந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறலாம் என்கிறார்கள். ஏற்கெனவே, விக்ரமுக்கெனவும் கேரள ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீடு நேரடி மலையாளப் படங்களின் ரிலீசை பாதிக்கும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்களாம். மம்முட்டி நடித்துள்ள ‘வர்ஷம்’ என்ற படத்தை அன்றைய தினத்தில் வெளியிட முடிவு செய்திருந்தார்களாம்.

ஆனால், ‘ஐ’ படத்தை வெளியிட பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் ‘வர்ஷம்’ படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். அதனால், அந்தப் படத்தின் ரிலீசை ஒரு வாரம் வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி