செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!…

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான்-2 விண்கலம் 2018ல் விண்ணில் ஏவப்படும்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்தனர். இதற்காக உள்நாட்டு தலைவர்கள், மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் இந்தியாவை பாராட்டியுள்ளன.இந்த வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடர விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ‘மங்கள்யான்–2’ என்ற விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த விண்கலத்தை 2018ம் ஆண்டு விண்ணில் செலுத்தி செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

தற்போது மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கிரகத்துக்கு செல்வதற்கான தொழில் நுட்ப அடிப்படையிலான ஒரு செயல்பாடு மட்டுமே. அடுத்து அனுப்ப இருக்கும் ‘மங்கள்யான்–2’ செவ்வாய் கிரகத்தில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் பற்றி ஆராயும்.‘மங்கள்யான்–2’ விண்கலம் ஏவுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் திட்டங்கள் பற்றி இஸ்ரோவின் அறிவியல் ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கும்.

முதலில் 2016ல் மங்கள்யான்–2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விண்கலத்தை செலுத்துவதற்கான ராக்கெட் என்ஜினை உருவாக்க போதிய கால அவகாசம் இல்லை. எனவே தான் 2018ல் அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.மங்கள்யான்–2 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் 20 பரிசோதனைகள் மற்றும் 15 திட்டங்களை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்படுகிறது.இப்போது மங்கள்யான் வெற்றி மூலம் இந்திய விஞ்ஞானிகளுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இது எதிர்காலத்தில் புதிய சாதனைகள் படைக்க உதவும்’ என்று இஸ்ரோ விஞ்ஞானி கிரன்குமார் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி