செய்திகள்,திரையுலகம் நடிகர் விஷ்ணுவுக்கு கைகொடுத்த விஷால்-ஆர்யா!…

நடிகர் விஷ்ணுவுக்கு கைகொடுத்த விஷால்-ஆர்யா!…

நடிகர் விஷ்ணுவுக்கு கைகொடுத்த விஷால்-ஆர்யா!… post thumbnail image
சென்னை:-ஆர்யா, டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ஜீவா என்ற படத்தை தயாரித்துள்ளார். விஷால், அந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார்.சென்னையில் ஜீவா படத்தின் ஆடியோ விழா நடந்தபோது, ஆர்யா பேசும்போது, கிரிக்கெட்டை மையமா வச்சு ஒரு படம் பண்ணப்போறோம்னு சொன்னாங்க. டைரக்டர் சுசீந்திரன், ஹீரோ விஷ்ணு என்றதும் நான் கதையை கூட கேட்காமல் தயாரிக்க சம்மதிச்சேன். படம் முடிஞ்சதும் விஷால் பார்த்துட்டு ரொம்ப நல்லா வந்திருக்குன்னு சொன்னார். அதனால் படம் கண்டிப்பா ரசிகர்களுக்கும் பிடிக்கும்னு நெனைக்கிறேன் என்றார்.

பின்னர் விஷால் பேசும்போது, இந்த படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒரு கிரிக்கெட் வீரரோட உணர்வுகளை அழகா வெளிப்படுத்தியிருக்காரு டைரக்டர். நிஜத்தில் கிரிக்கெட் வீரரான விஷ்ணு கிரிக்கெட் வீரராகவே வாழ்ந்துள்ள இந்த படம் கண்டிப்பாக அவருக்கு பெரிய திருப்புமுனையா அமையும்னு எதிர்பார்க்கிறேன். அதோடு, இந்த படத்தை வாங்கி என்னோட விஷால் பிலிம் பேக்டரி மூலம் நானே வெளியிடுறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி