செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…

95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!…

95 சதவீத பயணத்தை நிறைவு செய்தது மங்கள்யான்!… post thumbnail image
சென்னை:-450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் 5ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய அதன் பயணம் சுமுகமாகத் தொடர்ந்து வருகிறது. மங்கள்யான் பூமியில் இருந்து 2110 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அதே சமயம் பூமியும் சூரியனைச் சுற்றி வேகமாய் வேறு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால் இன்று மங்கள்யான் பூமியை விட்டு 214,116,155 கி.மீ தூரத்தில் பயணிக்கிறது. இந்தத் தூரத்தால் பூமிக்கும் மங்கள்யானுக்கும் இடையில் இருவழிச் செய்திப் பரிமாற்ற நேரம் 1427.4 வினாடிகள். செவ்வாய்க் கிரகத்தை வேகமாக நெருங்கும் மங்கள்யான், தனது இலக்கிலிருந்து 2,79,5582 கி.மீ தூரத்தில் தனது இலக்கை நோக்கி இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்தே நாட்களில் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் நுழைந்திருக்கும்.

மங்கள்யான் விண்கலம் தனது 95 சதவீத பயணத்தை பூர்த்தி செய்து விட்டது.இன்னும் பயணம் செய்ய 40 லட்சம் கிலோமீட்டர்களே உள்ளன. தனது நிலை குறித்த பல்வேறு தொகுதிகள் அளவீடுகள் குறித்து முக்கிய தகவல்களை மங்கள்யான் அனுப்பி வைத்து உள்ளது. இந்த தொலைக்கணிப்பு சமிக்ஞை என்று அழைக்கப்படுகிறது.இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அதன் சமூக தளத்தில் வெளியிட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி