செய்திகள்,திரையுலகம் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் விஜய் – சிம்புதேவன்!…

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் விஜய் – சிம்புதேவன்!…

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் விஜய் – சிம்புதேவன்!… post thumbnail image
சென்னை:-விஷால் ஜோடியாக ‘பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் டுவிட்டர் பக்கத்தில், பெரிய படம் ஒன்றிலிருந்து விலகிவிட்டேன். என்ன படமென்று நீங்கள் கண்டுபிடியுங்கள் என்று பொடி வைத்து தகவல் வெளியிட்டார் ஸ்ருதி. இதையடுத்து அவர் விஜய் படத்திலிருந்து விலகியதாக கோலிவுட்டில் தகவல் பரவியது.

ஸ்ருதியின் டுவிட்டர் தகவல் விஜய் பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பட குழுவினர் ஸ்ருதியை தொடர்பு கொண்டு, இப்படி மெசேஜ் போட்டது ஏன். என்று கேட்டனர். விஜய் படத்திலிருந்து விலகுவதாக நான் சொல்லவில்லையே என்று பதற்றத்துடன் கூறிய ஸ்ருதி, ‘விஜய்யுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். உடனடியாக அதுபற்றி எனது இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டுவிடுகிறேன்.

ஏற்கனவே நான் வெளியிட்ட டுவிட்டர் தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றார். சிறிது நேரத்தில் விஜய் படத்தில் நடிப்பதை உறுதி செய்து தகவல் வெளியிட்டதுடன். விஜய், சிம்புதேவனுக்கும் அந்த தகவலை அனுப்பி வைத்தார்.விஜய்யின் ‘கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து விஜய்யுடன் ஸ்ருதி நடிக்கும் பட ஷூட்டிங் தொடங்க உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி