செய்திகள்,திரையுலகம் உலக அதிசயத்தை நிகழ்த்தும் நடிகர் கமல் – சித்ரா லட்சுமணன்!…

உலக அதிசயத்தை நிகழ்த்தும் நடிகர் கமல் – சித்ரா லட்சுமணன்!…

உலக அதிசயத்தை நிகழ்த்தும் நடிகர் கமல் – சித்ரா லட்சுமணன்!… post thumbnail image
சென்னை:-தனது நான்கு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்தவர் கமல்.கடந்த 40 ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல், தான் கதாநாயகனான பிறகு தேவர் மகன் என்ற படத்தில் அவருக்கு மகனாகவே நடித்தார்.

அந்த வகையில், சிவாஜியின் மடியில் தவழ்ந்த குழந்தை நட்சத்திரங்களில் கமல் குறிப்பிடத்தக்கவர். இதை. ஒரு மேடையில், சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபுவை விட அவரது மடியில் அதிகமாக தவழும் பாக்கியம் பெற்றவன் நானாகத்தான் இருப்பேன் என்று கமலே கூறினார்.அப்படிபட்ட கமல், இதுவரை வருடத்திற்கு ஒரு படம் என்று இருந்தவர் இப்போது இரண்டு படங்கள் வரை கொடுத்து விடும் வகையில் தனது வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக, தனது மகளின் வயது கொண்ட ஆண்ட்ரியா உள்ளிட்ட இளவட்ட நடிகைகளுடன் இப்போதும் டூயட் பாடிக்கொண்டிருகிறார்.இதுபற்றி ஒரு பக்க கதை படத்தின் விழாவில் நடிகர் சித்ரா லட்சுமணன் பேசுகையில்,

கமலின் மகளான ஸ்ருதிஹாசன், இந்திய சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி வருகிறார். அதேபோல் இவரும், இப்போதைய முன்னணி ஹீரோயின்களுடன் டூயட் பாடி வருகிறார். இந்த அதிசயம் உலக அளவில் இதுவரை எங்கும் நிகழ்ந்ததில்லை. இனி நிகழப்போவதுமில்லை என்று பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி