செய்திகள்,திரையுலகம் கதைக்குத் தேவைப்பட்டால் மொட்டை அடிக்கவும் தயார் – விஜய் பட ஹீரோயின் அறிவிப்பு!…

கதைக்குத் தேவைப்பட்டால் மொட்டை அடிக்கவும் தயார் – விஜய் பட ஹீரோயின் அறிவிப்பு!…

கதைக்குத் தேவைப்பட்டால் மொட்டை அடிக்கவும் தயார் – விஜய் பட ஹீரோயின் அறிவிப்பு!… post thumbnail image
மும்பை:-பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரி கோம் படம் ஹிந்தித் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்தியாவுக்காக குத்துச் சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று கொடுத்த மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பிரியங்கா சோப்ரா மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறாராம். உண்மையாக மொட்டை அடிக்கவில்லையென்றாலும், ஒரு முழுப்படத்திற்காக மொட்டை அடிக்க வேண்டிய நிலை வந்தால் அதற்காக கண்டிப்பாக அடிப்பேன் என்று பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார். மேரி கோம் படத்தில் ஒரு சில காட்சியில் மட்டுமே மொட்டைத் தலையுடன் நடிக்க வேண்டி இருந்ததால் உண்மையாக மொட்டை அடிக்கவில்லை.

அதன் பின் முழு படத்திலும் எப்படி நடிப்பது. ஆனால், ஒரு படத்தில் முழுவதுமாக மொட்டைத் தலையுடன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் வந்தால் அதற்காக கண்டிப்பாக மொட்டை அடிப்பேன். ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் நடிக்க வேண்டி வந்தால் எப்படி மொட்டை அடிக்க முடியும் என்கிறார் பிரியங்கா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி