செய்திகள்,திரையுலகம் எங்கேயும் எப்போதும் நடிகை வினோதினிக்கு திருமணம்!…

எங்கேயும் எப்போதும் நடிகை வினோதினிக்கு திருமணம்!…

எங்கேயும் எப்போதும் நடிகை வினோதினிக்கு திருமணம்!… post thumbnail image
சென்னை:-‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அனன்யாவின் அக்காவாக நடித்து பிரபலமானவர் வினோதினி. தொடர்ந்து யமுனா, கடல், தலைமுறைகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது.

இவருக்கும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. அக்டோபர் முதல்வாரத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் மிக எளிமையாக இவர்களது திருமணம் நடைபெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி