செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…

டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…

டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!… post thumbnail image
நியூசிலாந்து:-இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள். குறிப்பாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டோனி டெஸ்ட் கேப்டனுக்கு பொருத்தமானவர் தான் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–தோல்வியால் டோனி நெருக்கடியில் இருக்கிறார். ஆனால் என்னை பொறுத்தவரை டெஸ்ட் கேப்டன் பதவிக்கு அவர் பொருத்தமானவர். நெருக்கடியில் சிறப்பாக செயல்படும் திறமை அவருக்கு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி