செய்திகள்,விளையாட்டு பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…

பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…

பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!… post thumbnail image
புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும் என்று போர்க்கோடி உயர்த்தியுள்ள முன்னாள் வீரர்கள், கேப்டன் டோனி தலைமை தொடர்பாகவும் கேள்வி எழுப்புகின்றனர்.

லார்ட்ஸ் போட்டியில் வெற்றி பெற்றபிறகு கடினமான ஆடுகளங்களில் விளையாடுவதற்காக பயிற்சியாளர் என்ற முறையில் பிளெட்சர் என்ன செய்தார்? முன்னிலையை தக்க வைப்பதில் கவனக்குறைவாக இருந்துள்ளார். எனவே, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் வலியுறுத்தினார். கேப்டன் டோனியைப் பொறுத்தவரையில் தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி சிறப்பாக ஆடுகிறார். ஆனால் கேப்டன் என்ற முறையில் தனது வியூகங்களை ஏன் மாற்றவில்லை? அணித் தேர்வு குறித்தும் கேள்வி எழுகிறது என்று வடேகர் குறிப்பிட்டார்.

கேப்டன் டோனி எப்போதும் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், எல்லா நேரத்திலும் அவ்வாறு நடக்காது என்றும் முன்னாள் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத் கூறினார். பயிற்சியாளர் பிளெட்சரின் பங்களிப்பு மிகப்பெரிய ஜீரோ என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னாவும், கிறிஸ் ஸ்ரீகாந்தும் குறை கூறினார்கள்.இதேபோல் வீரர்களின் தற்போதைய ஆட்ட நுட்பங்களை முன்னாள் மிடில் ஆர்டர் வீரர் சந்து போர்டே விமர்சித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி