செய்திகள்,திரையுலகம் ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…

ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…

ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?… post thumbnail image
சென்னை:-ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வரும் ‘தனி ஒருவன்’ படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.இப்படி ஒரு தகவல் வெளியானதும் எரிச்சல் அடைந்த அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அரவிந்த்சாமி கூறியதை ஆமோதிக்கும் வகையில், தனி ஒருவன் படக்குழுவைச் சேர்ந்தவர்களும், அப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவில்லை, வேறொரு முக்கியமான கேரக்டரில் தான் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். வில்லனாக நடிக்க வில்லை என்றால் வேறு என்ன வேடத்தில் நடிக்கிறராம் அரவிந்த்சாமி. ஜெயம்ரவியின் அப்பா வேடத்தில் நடிப்பதாக சிலர் காதைக்கடிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி