அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்… post thumbnail image
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார். அதற்கான மூலக் காரணத்தை முன்னாள் மத்திய வெளியுறவு துறை மந்திரி நட்வர் சிங் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

’ஒரு வாழ்க்கை போதாது’ என்ற தலைப்பில் தனது சுய சரிதையை எழுதி, அதனை விரைவில் வெளியிடவுள்ள நட்வர் சிங், காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்டவர். கடந்த 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறிய நடவர் சிங், சோனியா காந்தி ஏன் பிரதமராக பதவி ஏற்க முன்வரவில்லை என்பது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போது ஒரு புதிய கருத்தினை பதிவு செய்துள்ளார். ‘தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியைப் போல் நாட்டின் பிரதமராகி விட்டால் தனது தாயார் சோனியாவையும் யாராவது கொன்று விடுவார்கள் என்று அவரது மகன் ராகுல் காந்தி பயந்தார்.

எனவே, ஒரு மகன் என்ற முறையில் சோனியா காந்தி பிரதமராக அனுமதிக்க முடியாது என்று கூறி, ராகுல் காந்தி தான் தடுத்து விட்டார்’ என்று இந்த பேட்டியில் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.2004-ம் ஆண்டு சோனியா காந்தியின் வீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தனது கருத்தினை வெளிப்படுத்தியதாக நட்வர் சிங் கூறியுள்ளார்.இந்த உண்மையினை தனது சுய சரிதையில் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்காவுடன் கடந்த மே மாதம் தனது வீட்டுக்கு வந்திருந்ததாகவும் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி