செய்திகள்,திரையுலகம் திருமணம் எனும் நிக்காஹ் (2014) திரை விமர்சனம்…

திருமணம் எனும் நிக்காஹ் (2014) திரை விமர்சனம்…

திருமணம் எனும் நிக்காஹ் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
தமிழ் சினிமாவில் மீண்டும் காதலை ஞாபகப்படுத்தியிருக்கும் படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஒரு ரயில் பயணத்தில் தங்களின் தேவைக்காக ஒரிஜினல் மதப் பெயர்களை மாற்றி வேறு மதப் பெயரில் பயணம் செய்கிறார்கள் ஜெய், நஸ்ரியாவும்.ஆயிஷா என்ற பெயரில் பயணம் செய்யும் நஸ்ரியாவும், அபு பக்கர் எனும் பெயரில் பயணம் செய்யும் ஜெய்யும் முதல் சந்திப்பிலேயே ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இருவருமே ஆச்சாரமான இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், எங்கே தான் ஒரு இந்து என்பது தெரிந்துவிட்டால் காதல் கைவிட்டுப்போய்விடுமே எனப்பயப்படும் இருவருமே தங்கள் ஒரிஜினல் மதங்களை மறைத்து முஸ்லீமாகவே தங்களைக் காட்டிக் கொண்டு காதலிக்கத் தொடங்குகிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் தங்கள் மதத்திலேயே வேறொரு வரனைப் பார்த்து மண முடிக்க நிச்சயம் செய்கிறார்கள் ஜெய், நஸ்ரியா குடும்பத்தினர். இதன் பிறகு ஜெய்யும், நஸ்ரியாவும் என்ன செய்கிறார்கள்? தாங்கள் இருவருமே ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிந்ததா? இல்லையா? என்பதே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் முடிவு..

இந்து – முஸ்லீம் காதல், இந்து – கிறிஸ்து காதல் என ஏகப்பட்ட மதம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளை தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால், இதிலிருந்து முற்றிலுமாக வேறு வகையான காதல் ஒன்றை தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்து ‘சபாஷ்’ வாங்குகிறார் இயக்குனர் அனீஷ். ரொம்பவும் ‘சென்சிட்டிவான’ ஒரு கதைக்களத்தைக் கையிலெடுத்து அதைப் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார்.படத்தின் அறிமுகக் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்து, அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் அமைத்து ரசிகர்களை கதைக்குள் ஈஸியாக உள்ளிழுக்கிறது முதல் பாதி திரைக்கதை. ஆனால், தாங்கள் இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என நாயகனுக்கும் நாயகிக்கும் தெரிந்த பிறகு அவர்கள் எடுக்கும் முடிவும், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களும் செம போர்! அதேபோல் க்ளைமேக்ஸும் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கிறது.ஒரு கட்டத்தில் தான் சொல்ல வந்த கருத்திலிருந்து இயக்குனர் விலகி வேறு எதையோ சொல்ல வர, கடைசியில் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறது. இரண்டாம் பாதி திரைக்கதையிலும், க்ளைமேக்ஸிலும் கவனம் செலுத்தியிருந்தால் மறக்க முடியாத காதல் படமாக அமைந்திருக்கும்.

ஜெய் வழக்கமான அதே பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு. ஆனாலும் போரடிக்கவில்லை. நடிப்பதற்கே வாய்புள்ள நல்ல வேடம் நஸ்ரியாவுக்கு. அவரின் மற்ற படங்களைவிட இதில் அவரின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. நஸ்ரியாவின் கடைசிப் படம் என்பது ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய வருத்தமாகத்தான் இருக்கும். இவர்கள் இருவரைத் தவிர, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்து போனாலும் கதையை நகர்த்துவதற்கு பயன்பட்டார்களே தவிர யாரும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. நஸ்ரியாவின் ஃப்ரெண்டாக வரும் தீக்ஷிதா மட்டுமே நினைவில் நிற்கிறார். பாண்டியராஜன் படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் தேவையில்லாமல் வந்து போயிருக்கிறார்.ஜிப்ரான் இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் அருமை.

மொத்தத்தில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ காதல்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி