செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!… post thumbnail image
புதுடெல்லி:-வங்கிகளுக்கு பெரும் அளவில் கடன் பாக்கி செலுத்தவேண்டிய முதல் 50 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமாறு சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் 4,022 கோடி கடன்பாக்கியுடன் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வின்சம் டைமன்ட் ஜுவல்லரி(சுராஜ் டைமண்ட்ஸ்) 3,243 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், எலக்ட்ரோதெர்ம் இந்தியா லிமிடெட் 2,653 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் இருகின்றன.

கிங்பிஷர் நிறுவனத்திடமிருந்து மட்டுமே திரும்பப்பெற வேண்டிய தொகை கிட்டத்தட்ட 4,000 கோடிகளுக்கு மேல் இருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நிதி தேவைகளுக்காக வங்கிகள் ஆண்டுக்கு 2.4 லட்சம் கோடி திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான கணக்கீட்டின்படி முதல் 50 நிறுவனங்களும் சேர்ந்து செலுத்தவேண்டிய கடன் பாக்கி 53,000 கோடியாகும்.இதில் குறைந்தது 19 நிறுவனங்களாவது 1000 கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ளன.

தொடர்ந்து பல வருடங்களாகவே வங்கிகள் இந்த கடன் தொகையை திரும்பப்பெறும் முயற்சியில் ஈடுபட்டுவரும்போதிலும் இதுவரை 1,100 கோடிக்கும் குறைவாகவே கடன் அடைக்கப்பட்டுள்ளது. இதில் பாதி தொகை கிங்பிஷர் நிறுவனத்திடம் பெறப்பட்டதாகும்.இன்று வங்கிகள் தங்களிடத்தில் செயல்படாத அல்லது மறுகட்டமைப்புக்கு உட்பட்ட 6 லட்சம் கோடி சொத்து மதிப்புகளை வைத்துள்ளன.பொருளாதார மந்தநிலையால் சில நிறுவனங்கள் பாதிக்கப்பட்டபோது அரசின் மோசமான முடிவுகளால் சில நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டன.ஆனால் பெரும்பாலான வழக்குகளில் நிறைய கடன்தாரர்கள் பகட்டான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களுடைய கடன்களை அடைப்பதற்கு அதிக முயற்சி எடுக்கவில்லை என்றே கூறப்படுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி