செய்திகள்,திரையுலகம் 35 வருஷத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லும் டி.ஆர்!…

35 வருஷத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லும் டி.ஆர்!…

35 வருஷத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லும் டி.ஆர்!… post thumbnail image
சென்னை:-1980 ஆம் ஆண்டில் வெளியான படம் ஒருதலை ராகம். டி.ராஜேந்தரை திரை உலகுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அடையாளம் காட்டிய ஒருதலை ராகம் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் சரித்திர சாதனையையே படைத்தது. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த ஒருதலை ராகம் படத்தின் வெற்றி அன்றைய முன்னணி நட்சத்திரங்களை தூங்கவிடாமல் செய்தது. இப்படி பல பெருமைகளைக் கொண்ட ஒருதலை ராகம் படம் முழுக்க முழுக்க மாயவரத்திலேயே படமாக்கப்பட்டது.

குறிப்பாக, மயிலாடுதுறையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மண்ணம்பந்தல் என்ற ஊரில் அமைந்துள்ள ஏவிசி கல்லூரியிலேயே பல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒருதலை ராகம் படத்தின் கதைப்படி, ஏவிசி கல்லூரியில் படிக்கும் ரூபாவை அதே கல்லூரியில் படிக்கும் சங்கர் காதலிப்பார். எனவே அக்கல்லூரியிலேயே நிறைய காட்சிகளை படமாக்கி இருந்தார் டி.ராஜேந்தர். ஏவிசி கல்லூரியில் ஒருதலை ராகம் படத்தை எடுக்க மற்றொரு காரணம்.டி.ராஜேந்தர் அக்கல்லூரியில் படித்தவர்.அதுமட்டுமல்ல, ஏவிசி கல்லூரியில் படித்தபோது அவர் காதலித்ததும், காதலில் தோற்றதையும் வைத்தே ஒருதலைராகம் கதையை எழுதி இருந்தார்.

ஒருதலை ராகம் படத்தின் படப்பிடிப்புக்காக ஏவிசி கல்லூரிக்கு சென்ற டி.ராஜேந்தர் அதன் பிறகு அக்கல்லூரியின் உள்ளே கால் வைக்கவில்லை. 35 வருடங்கள் கடந்தநிலையில், இன்னும் சில தினங்களில் ஏவிசி கல்லூரியில் நடைபெறவிருக்கும் கல்லூரி விழாவில் கல்லூரிக்கு டி.ராஜேந்தர் கலந்து கொள்ள இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி