செய்திகள்,முதன்மை செய்திகள் நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!…

நைஜீரியாவில் மீண்டும் 60 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள்!… post thumbnail image
மைடிகுரி:-நைஜீரியாவில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதிக்குள் கடந்த ஏபரல் மாதம் நுழைந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கடத்திச் சென்றனர்.

அரசுப் படைகளால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மாணவிகளை விடுவிக்க தயார் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.அவர்களை மீட்க ராணுவம் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் போர்னோ மாநிலம், மைடிகுரி நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மாப்சா கிராமத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 60க்கும் மேற்பட்ட சிறுமிகள், 31 சிறுவர்கள் மற்றும் சில இளம்பெண்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.அவர்களை எதிர்த்து போராடிய 4 கிராம வாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி