செய்திகள் 10 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து இந்திய சிறுவன் சாதனை!…

10 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து இந்திய சிறுவன் சாதனை!…

10 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து இந்திய சிறுவன் சாதனை!… post thumbnail image
லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் வசித்து வருபவர் தானிஷ்க் ஆபிரகாம். 10 வயதான இவர் பள்ளிப்படிப்பை முடித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்று டிப்ளமோ பெற்று விட்டார்.இது அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில்:-

இது எளிதான ஒன்றல்ல. நான் கடுமையாக முயற்சி செய்தேன். கடைசியில் நான் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.நான் அடுத்து சமுதாயக் கல்லூரியில் சேர்ந்து படிப்பேன். அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பு படிப்பேன். எதிர்காலத்தில் விஞ்ஞானி அல்லது டாக்டர் ஆக ஆசைப்படுகிறேன். ஆனால் பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் விரும்புகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி