செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!…

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!…

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!… post thumbnail image
சிட்னி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கேரி கில்மோர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. கேரி கில்மோர் 15 டெஸ்ட் போட்டியில் விளையாடி 54 விக்கெட்டும், 5 ஒருநாள் போட்டியில் ஆடி 16 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.

1975ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில், இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் ‘ஸ்விங்’ தாக்குதலில் மிரட்டிய கில்மோர் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் அள்ளினார். 1983ம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டியின் சிறந்த பந்து வீச்சாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி