செய்திகள்,திரையுலகம் கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு!…

கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு!…

கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு!… post thumbnail image
சென்னை:-சென்னை ஐகோர்ட்டில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆனால், ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த மே 12ம் தேதி வணிக வரித்துறை அதிகாரிகள் அரசாணை பிறப்பித்துள்ளனர்.இது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், கோச்சடையான் படத்துக்கு வரி விலக்கு அளித்தது சரிதான். எனவே, கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரியை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது என்று கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு மனுதாரரின் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி,கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்க கூடாது என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல், ஒரு சிலரை தவிர, தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கேளிக்கை வரியை வசூலித்து வருகின்றனர். இந்த கோர்ட்டின் உத்தரவினை அவர்கள் மதிக்கவில்லை.என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி