செய்திகள்,திரையுலகம் ‘நான்தான் பாலா’ படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற நடிகர் விவேக்!…

‘நான்தான் பாலா’ படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற நடிகர் விவேக்!…

‘நான்தான் பாலா’ படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற நடிகர் விவேக்!… post thumbnail image
சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நான்தான் பாலா’. இதுவரையிலான படங்களில் காமெடியில் கலக்கிய விவேக் இப்படத்தில் புதிய பரிணாமத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்ணன் என்பவர் இயக்குகிறார்.

வெங்கட் க்ரிஷி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.இப்படத்தில் அனைத்து விஷயங்களும் உண்மைத் தன்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக, விவேக் முறையாக சமஸ்கிருதம் பயின்றுள்ளார். பயின்றதோடு, டப்பிங்கில் சமஸ்கிருதத்தில் பேசி அசத்தியும் இருக்கிறார். இப்படம் ஒரு முழுநீள கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் பலத்த ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற 13ம் தேதி வெளியிடவுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி