செய்திகள்,திரையுலகம் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் ஐஸ்வர்யா ராய்?…

அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் ஐஸ்வர்யா ராய்?…

அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் ஐஸ்வர்யா ராய்?… post thumbnail image
மும்பை: -நடிகை ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.ஆனால் மாமியார் ஜெயா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நிலவி வந்ததாம்.

இதனை அபிஷேக் பச்சன் கண்டு கொள்ளாததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டதாக பாலிவுட்டில் செய்தி பரவியது.இதைத் தொடர்ந்து கணவரைப் பிரிய ஐஸ்வர்யா ராய் முடிவெடுத்திருப்பதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவழியாக எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து பெற்றுக் கொடுத்துவிட்டீர்கள். அப்படியே அடுத்த திருமணம் எப்போது என்றும் சொல்லிவிடுங்கள். என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி