செய்திகள்,விளையாட்டு விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!…

விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!…

விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய அணி கேப்டன் டோனி கடந்த ஆண்டு ஒரு விளம்பரத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.8 கோடிக்கு ஒப்பந்தம் ஆகி இருந்தார். தனது சிறப்பான ஆட்டம் மூலம் வீராட் கோலி அவரை முந்தினார். அடிடாஸ் நிறுவனம் அவரை ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்து இருந்தது.

இந்நிலையில் டோனியின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவர் வீராட் கோலியை முந்தியுள்ளார்.கடந்த 4 மாதங்களில் டோனியின் வர்த்தக மதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு விளம்பரத்தில் ரூ.8 கோடி பெற்று வந்த அவர் தற்போது ஒரு விளம்பரத்தில் ரூ.13 கோடிக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.விளம்பரம் மூலம் அதிக வருமானம் பெறும் வீரர் என்ற பெருமையை டோனி பெற்று உள்ளார். பெப்சி, ஏர்செல், எக்சைட், ரீபோன் உள்பட 21 விளம்பர நிறுவனங்கள் அவரது கைவசம் உள்ளது.விளம்பரங்களில் நடிக்க அதிக தொகை பெறுபவர் நடிகர் அமீர்கான். ஒரு விளம்பரத்தில் அவருக்கான ஆண்டு ஒப்பந்தம் ரூ.15 கோடி. அவருக்கு அடுத்த நிலையில் டோனி உள்ளார்.

டோனியை 2010–ல் மூன்று ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்த ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர் அருண்பாண்டே கூறும்போது, டோனியை சமீபத்தில் 6 முதல் 8 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளார். அவரது செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது என்றார்.ஆஸ்திரேலிய விளம்பர நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறும்போது, கிரிக்கெட் களத்தில் டோனி கடினமாக உழைக்கிறார். 3 விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்கு கேப்டனாக திகழ்கிறார்.ஐ.பி.எல். போட்டியில் சென்னையை வழி நடத்துகிறார். புதுமையான ஸ்டைலில் விளையாடுவதால் விளம்பர நிறுவனங்கள் அவரை விரும்புகின்றன என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி