செய்திகள்,திரையுலகம் பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!…

பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!…

பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-2013-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த 7 கலைஞர்கள் கொண்ட நடுவர் குழு தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, குல்சாரை இந்த விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

1934-ம் ஆண்டு பிறந்த குல்சாரின் இயற்பெயர் சம்பூரண் சிங் கல்ரா. 1956-ம் ஆண்டு பாடலாசிரியராக தனது திரைத்துறை பயணத்தை தொடங்கிய குல்சார், பல இந்தி திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இந்தித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய ஆண்டி, மாசம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை ஆகும்.

இசையமைப்பாளர்கள் ராகுல் தேவ் பர்மன், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோருடன் பணியாற்றி உள்ளார். பாடல்கள் தவிர பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். தூர்தர்ஷன் தொடர்களுக்கு பாடல்கள் எழுதி அவை பிரபலம் ஆகியுள்ளன.79 வயதான குல்சார் தனது கலைச்சேவைக்காக, சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷன் விருது மற்றும் பல்வேறு தேசிய திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி