செய்திகள்,விளையாட்டு ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…

ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…

ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!… post thumbnail image
லண்டன்:-கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இதில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தவான் கடந்தாண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார். 2013ல் இவர் 26 ஒருநாள் போட்டிகளில் 1162 ரன் குவித்துள்ளார்.

5 சதமும் விளாசியுள்ளார். இவரைத்தவிர ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ரோஜர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி