அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…

ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…

ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!… post thumbnail image
அமேதி:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.அமேதி தொகுதியில் அவர் தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு அமேதியில் வங்கி கணக்கு எதுவும் இல்லை. இதையடுத்து புதிதாக வங்கி கணக்கு தொடங்க திட்டமிட்டார்.

வங்கி கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பதற்கான சான்று அளிக்க வேண்டும்.இதையடுத்து ராகுல்காந்தி இருப்பிட சான்று கேட்டு அமேதி கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தார்.ஆனால் அவருக்கு இருப்பிட சான்று அளிக்க கலெக்டர் மறுத்து விட்டார். ராகுல்காந்திக்கு அமேதியில் எந்த குடியிருப்பும் இல்லை. அவர் அமேதியில் வசிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எதிர்பாராதவிதமாக கூட அவர் அமேதியில் தங்கி இருக்கவில்லை. எனவே அவருக்கு இருப்பிட சான்று வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி விண்ணப்பத்தை கலெக்டர் தள்ளுபடி செய்து விட்டார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும் என்று கடந்த 2011–ம் ஆண்டு தேர்தல் கமிஷன் புதிய விதி வகுத்து இருந்தது. அதன்படி தொகுதி மாறி போட்டியிடுபவர்கள் அந்த தொகுதியில் கணக்கு தொடங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ராகுல்காந்தியின் விண்ணப்பம் தள்ளுபடியானது காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி