அரசியல்,செய்திகள்,திரையுலகம் ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…

ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!…

ஜவஹர்லால் நேரு நின்ற தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா!… post thumbnail image
மும்பை:-காதலன், பாட்ஷா, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை நக்மா தற்போது அரசியலில் குதிக்க உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புல்பூர் என்ற தொகுதியில் அவர் போட்டியிடப்போவதாகவும், காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தற்போது போஜ்புரி மொழிகளில் மட்டுமே நடித்து வரும் நக்மாவுக்கு வேறு எவ்வித வாய்ப்புகளும் இல்லை. அதனால் அவர் தீவிர அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். புல்பூர் தொகுதிக்கு அவர் அடிக்கடி சென்று அங்கு காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து அறிந்து வருகிறார். இந்த தொகுதியில் தான் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையை சொந்த ஊராக கொண்ட நக்மாவிற்கு தற்போது 39 வயது ஆகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடன்பிறந்த தங்கை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் தாய்க்கும், இந்து தந்தையாருக்கும் பிறந்த இவர் தற்போது கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்துள்ளார். ரஜினிகாந்துடன் இவர் நடித்த பாட்ஷா படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி