செய்திகள்,பொருளாதாரம் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!…

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ‘முகேஷ் அம்பானி’ தொடர்ந்து முதலிடம்!… post thumbnail image
புதுடெல்லி:-சீனாவை சேர்ந்த ஹருண் நிறுவனம் 2014–ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை தயாரித்தது. இதில் முகேஷ் அம்பானி 41வது இடத்தில் உள்ளார். லட்சுமி மிட்டல் 49வது இடத்திலும், சன்பார்மா நிறுவனத்தின் திலிப்சங்கவி மற்றும் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ஆகிய இருவரும் 77வது இடத்தை பிடித்துள்ளனர்.

6,800 கோடி டாலர் சொத்து மதிப்பை பெற்று பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். வாரன் பஃபெட் இரண்டாவது இடத்திலும், அமான்சியோ ஆர்டிகோ மூன்றாவது இடத்திலும், கார்லோஸ் ஸ்லிம் நான்காவது இடத்திலும் உள்ளனர்.அதிக கோடீஸ்வரர்களை (70) கொண்டுள்ளதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன.

மெகா கோடீஸ்வரர்களின் சராசரி வயது 64–ஆக உள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் ஒன்று கூடியுள்ளது. சராசரியாக ஒன்பது கோடீஸ்வரர்களில் ஒருவர் பெண் மெகா கோடீஸ்வரர் உள்ளார். இது சென்ற ஆண்டில் பத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இருந்தது.இங்கிலாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் மெகா கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள முன்னணி 6 நகரங்களில் மும்பையும் ஒன்றாகும். மும்பையில் மொத்தம் 33 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி