கோச்சடையான் பெயருடைய இந்த மொபைல் போனில் கோச்சடையான் படத்தின் ஸ்டில்கள், வசனங்கள், வீடியோ கிளிப்பிங்ஸ், ஸ்க்ரீன் சேவர்ஸ் படங்கள், மற்றும் பாடல்களின் சில வரிகள் ஆகியவை அடங்கியது. தற்போது வெளிவந்திருக்கும் கோச்சடையான் மொபைல் போன்களின் விலை ரூ.1800 முதல் ரூ.8000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் கோச்சடையான் மொபைல் போன்களை வாங்குவதில் பெரும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய வகை மொபைல் போன்களை நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கார்பன் மொபைல்ஸ் நிறுவனர் சுதிர் ஹசிஜா வெளியிட அதை கோச்சடையான பட இயக்குனரும் ரஜினிகாந்தின் இளையமகளுமான செளந்தர்யா பெற்றுக்கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி