அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!…

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி!… post thumbnail image
ஐதராபாத்:-ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலத்தை அமைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, ஆந்திராவில் புதிய முதலமைச்சரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது. சிரஞ்சீவியை முதல்வர் பதவியில் அமர்த்துவது குறித்தும் காங்கிரஸ் ஆலோசித்தது.

ஆனால், அதற்கு போதுமான அளவு ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது ஒன்றே இறுதி வழியாக இருந்தது. இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு ஆளுநர் நரசிம்மன் அனுப்பினார். நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. மேலும், சட்டப்பேரவையை முடக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி