செய்திகள்,விளையாட்டு கோலியின் அதிரடியால் வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா…

கோலியின் அதிரடியால் வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா…

கோலியின் அதிரடியால் வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா… post thumbnail image
பதுல்லா:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காள தேசத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆசிய கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக டோனி விலகியதால் வீராட் கோலி கேப்டனாக செயல்பட்டார்.

முதலில் பேட் செய்த வங்காளதேச அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது. தொடக்க அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரகிம் 117 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் ஹக்யூ 77 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 10 ஓவர்கள் வீசி் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ஷிகர் தவான் (28), ரோகித் சர்மா (21) ஆகியோர் நிதானமாக ஆடி தங்கள் பங்களிப்பை அளித்தனர். அதன்பின்னர் இணைந்த விராட் கோலி-ரகானே ஜோடி வங்காளதேச பந்துவீச்சை துவம்சம் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

95 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசிய விராட் கோலி 136 ரன்களும், ரகானே 73 ரன்களும் குவித்து பெவிலியன் திரும்பினர்.49 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்களை குவித்த இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Score Board
BAN – Inning

Batsman R B M 4s 6s S/R
Haque A. b Aaron V. 77 106 18 5 3 72.64
Rahman S. c & b Shami M. 7 12 2 1 0 58.33
Haque M. st Karthik D. b Ashwin R. 23 29 5 4 0 79.31
Rahim M. c Sharma R. b Shami M. 117 113 17 7 2 103.54
Islam N. c Ashwin R. b Shami M. 14 19 3 1 0 73.68
Hossain N. c Karthik D. b Shami M. 1 6 0 0 0 16.67
Rahman Z. c Aaron V. b Kumar B. 18 12 3 2 1 150.00
Gazi S. not out 3 4 0 0 0 75.00
Mortaza M. not out 1 1 0 0 0 100.00
Extras: (w 12, b 1, nb 2, lb 3) 18
Total: (50 overs) 279 (5.6 runs per over)
Bowler O M R W E/R
Kumar B. 7.6 1 41 1 5.39
Shami M. 9.6 1 50 4 5.21
Aaron V. 7.5 0 74 1 9.87
Ashwin R.9.6 1 50 1 5.21
Jadeja R. 9.6 0 37 0 3.85
Rayudu A.2.6 0 17 0 6.54
Kohli V. 1.1 0 6 0 5.45

IND – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Rayudu A. not out 9 15 0 0 0 60.00
Kohli V. b Hossain R. 136 122 14 16 2 111.48
Dhawan S. lbw Razzak A. 28 44 2 5 0 63.64
Sharma R. b Rahman S. 21 29 4 1 1 72.41
Rahane A. c Kayes I. b Gazi S. 73 83 12 7 1 87.95
Karthik D. not out 2 2 0 0 0 100.00
Extras: (w 12, b 1, nb 2, lb 3) 18
Total: (49 overs) 280 (5.7 runs per over)
Bowler O M R W E/R
Haque M. 1.6 0 13 0 8.13
Rahim M. 0 0 0 0 0
Islam N. 0.6 0 15 0 25.00
Hossain N.3.6 0 20 0 5.56
Rahman Z.4.6 0 20 1 4.35
Gazi S. 7.6 0 49 1 6.45
Mortaza M.8.6 1 44 0 5.12
Hossain R.9.6 1 63 1 6.56
Razzak A.9.6 0 55 1 5.73

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி