அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடி பிரதமராக 78 சதவீத மக்கள் ஆதரவு!…கருத்து கணிப்பு தகவல்…

மோடி பிரதமராக 78 சதவீத மக்கள் ஆதரவு!…கருத்து கணிப்பு தகவல்…

மோடி பிரதமராக 78 சதவீத மக்கள் ஆதரவு!…கருத்து கணிப்பு தகவல்… post thumbnail image
வாஷிங்டன்:-இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்க உளவு நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்குத் தான் அதிக ஆதரவு வெளியாகி இருந்தது.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ரிசர்ச் சென்டர் என்ற நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் 2,464 பேரிடம் கடந்த டிசம்பர் 7–ந் தேதி முதல் ஜனவரி 12–ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தியது.இதிலும் நரேந்திர மோடிக்குத் தான் ஆதரவு பெருகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தேர்தலில் பிரபலமானவர்கள் யார்? உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு 78 சதவீதம் பேர் நரேந்திரமோடியை குறிப்பிட்டு உள்ளனர்.இது வரை எந்த கருத்துக் கணிப்பிலும் வெளி வராத ஆதரவு என்பது குறிப்பி டத்தக்கது. மோடிக்கு அடுத்த இடத்தில் அன்னா ஹசாரே இருக்கிறார். அவருக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தப் பட்டியலில் ராகுல்காந்தி மிக மோசமான நிலையில் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு 50 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான இந்தியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அடுத்த மத்தியில் ஆட்சியில் அமைக்க உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டதற்கு பாரதீய ஜனதா தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று 63 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.காங்கிரசுக்கு ஆதரவாக 19 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். 67 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை தழுவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நரேந்திரமோடிக்கு வட மாநிலங்களில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நகரங்கள் மட்டும் அல்லாது கிராமப் பகுதியிலும் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. படித்தவர்கள், ஏழை, பணக்காரர்கள் என ஒட்டு மொத்தமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள்.காங்கிரசுக்கு ஆதரவு என்பது வடகிழக்கு மாநிலங்கள் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகிய இடங்கில் மட்டுமே சற்று அதிகரித்து காணப் படுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் செயல்பாடுகள் பற்றி கருத்து கேட்டதற்கு சோனியாவை விட ராகுல்காந்தி பரவாயில்லை என்று தெரிவித்தனர்.ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை ஒப்பிட்டு கேட்ட போது ராகுல் காந்தியை விட மன்மோகன்சிங் பரவாயில்லை என்று 52 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல்காந்திக்கு ஆதரவாக 49 சதவீதம் பேரே கருத்து தெரிவித்துள்ளனர்.உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்த கட்சிக்கு 164 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆட்சி அமைக்கும் வகையில் இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு 74 சதவீத ஆதரவு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அதே சமயம் மராட்டியம், சத்தீஷ்கர் மட்டுமல்லாது மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பாரதீய ஜனதாவில் பலவீனம் காணப்படுவதாக கருத்து கணிப்பு கூறுகிறது.ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும் அந்த கட்சிக்கு 117 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி