செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பில் நடிகையின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது!…

படப்பிடிப்பில் நடிகையின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது!…

படப்பிடிப்பில் நடிகையின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது!… post thumbnail image
ஊட்டி:-இசைக்கருவிகளை விற்பனை செய்யும் ஒரு இளைஞனுக்கும், ஒரு பாடகிக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து தயாராகும் படத்துக்கு, ‘ஒரு வானவில் போலே’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இசைக்கருவிகள் விற்கும் இளைஞராக அனுமோகன் நடிக்க, பாடகியாக மனோசித்ரா நடிக்கிறார். டிரம்ஸ் சிவமணி முக்கிய வேடத்தில் வருகிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன், தலைவாசல் விஜய், ஜி.எம்.குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். ரியாஷா இசையமைக்க, பிரஜித் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஹைதர் அலி. பியானோ சினிமாஸ் சார்பில் படம் தயாராகிறது. படத்தை பற்றி டைரக்டர் ஹைதர் அலி கூறியதாவது:–

சமூக வலை தளங்களை நேர்மையான முறையில் எப்படி கையாள்வது? என்ற கருத்து படத்தில் சொல்லப்படுகிறது. வில்லன் கிடையாது. சூழ்நிலைதான் வில்லன். ஊட்டியில், மைனஸ் 4 டிகிரி குளிரில் படப்பிடிப்பு நடத்தினோம்.குளிர் தாங்காமல் கதாநாயகி மனோசித்ராவின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. பதற்றம் அடைந்த நாங்கள் உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். சிகிச்சைக்குப்பின் மனோசித்ரா தொடர்ந்து நடித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி