செய்திகள் சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…

சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…

சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு… post thumbnail image
சிங்கப்பூர்:-கடந்த டிசம்பர் 8–ந்தேதி சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த ஒரு பஸ் விபத்தில் தமிழர் ஒருவர் பலியானார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 400 பேர் ஈடுபட்டனர்.

அதில் 43 பேர் காயம் அடைந்தனர். 24 வாகனங்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக இந்தியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அவர்களில் சின்னப்பா விஜயரகுநாதபூபதி (32) என்ற தமிழருக்கு 15 வாரங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்த நிலையில் சிங்காரவேலு விக்னேஷ் (23) என்ற மற்றொரு தமிழரும் குற்றவாளி என நேற்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இவர்கள் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளி ஆக வேலை பார்த்தார்.

கலவரம் நடந்த போது ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட சின்னப்பா விஜய ரகுநாத பூபதியும், சிங்காரவேலு விக்னேசும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கேண்டீனில் மதுபானம் வழங்கும்படி கட்டாயப்படுத்தி தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த கலவர வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்ட விக்னேசுக்கு 7 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி