சின்ன திரை,திரையுலகம் ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!…

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!…

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!… post thumbnail image
சென்னை:-மலையாள திரைப்பட வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் சாதனையை எந்தப் படமும் செய்யவில்லை என்ற பெயரைப் பெற்றிருக்கும் படம் தான் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’.

அங்கு தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேல் வசூலில் மகத்தான சாதனை புரிந்து வரும் இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடந்து வந்தது. தெலுங்கு மற்றும் ஹிந்தி உரிமைகள் ஏற்கனவே சோல்ட் -அவுட் ஆகி விட்டது.
குறிப்பாக தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்து தயாரித்து, நடிக்க திட்டமிட்ட கமல் அதற்கான பேச்சுவார்த்தையை மோகன்லாலுடன் துபாயில் நடத்தினார்.கன்பார்மாக இந்தப் படத்தோட ரைட்ஸ் உங்களுக்குத்தான் என்று நம்பிக்கை வார்த்தை சொன்னார் மோகன்லால்.

ஆனால் தற்போது ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக் உரிமையை கமலின் நண்பரும் நடிகையுமான ஸ்ரீப்ரியாவும், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியும் இணைந்து பெரிய தொகையை கொடுத்து வாங்கி விட்டார்கள்.தற்போது இந்தப் படத்தை கமல் தயாரிக்கவில்லை. மாறாக மோகன்லால் நடித்த கேரக்டரில் கிட்டத்தட்ட ஹீரோ கேரக்டரில் நடிக்கிறார் கமல்.அதற்கான பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிந்து விட்டது.
த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கமல். அதற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
20 கோடி ரூபாய்.விரைவில் மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகள் மற்றும் டெக்னீஷியன்களை கம்பார்ம் செய்து விட்டு படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் டைரக்டர் ஜித்து ஜோசப்.

என்னதான் கமல் மோகன்லால் கேரக்டரில் நடிக்க முன் வந்தாலும், மலையாள வெர்ஷனில் வரும் மோகன்லாலின் நடிப்புக்கு அது ஈடாகாது என்பதும், தமிழ் ரீமேக்கிலும் மோகன்லாலே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதும் தான் த்ரிஷ்யத்தின் வெற்றி சூத்திரம் தெரிந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கமல்?.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி