செய்திகள்,திரையுலகம் தற்கொலை செய்து கொண்ட இயக்குனர்…

தற்கொலை செய்து கொண்ட இயக்குனர்…

தற்கொலை செய்து கொண்ட இயக்குனர்… post thumbnail image
இத்தாலி:-இத்தாலியின் புகழ்பெற்ற இயக்குனர் Carlo Lizzani. இவருக்கு வயது 91 ஆகும். இவர் உடல்நலமில்லாத இருந்த காரணத்தால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென மருத்துவமனையின் ஜன்னலில் இருந்து குதித்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் மருத்துவமனை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இவர் வெனிஸ் திரைப்பட விழாக்குழுவின் தலைவராக மூன்று ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.1948ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது கம்யூனிஸ்ட் தலைவர் Palmiro Togliatti அவர்களின் டாக்குமெண்டரி படம் எடுத்து தனது திரைப்பட வாழ்வினை தொடங்கினார்.

இத்தாலிய திரைப்பட வரலாற்றில் இவரது பணி மகத்தானது என்றும் இவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது என்றும் இவரது சக இயக்குனர் Ettore Scola தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி