அரசியல்,செய்திகள்,விளையாட்டு நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…

நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…

நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்… post thumbnail image
புதுடெல்லி:-கிரிகெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்தியாவின் புகழை உலகெங்கும் எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியுடன் இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து தனது 40-வது வயதில் ஓய்வு பெற்றார். அவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அன்றைய தினமே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தது.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை விளையாட்டு வீரர் ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும். சச்சினுடன் சேர்த்து வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி விருது வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சச்சின் மற்றும் சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார். இவ்விழாவில், துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள், சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.பாரத ரத்னா விருது பெற்ற சச்சின், நிருபர்களிடம் கூறுகையில், “நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை நான் பெற காரணமாக இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது ஒரு வகையில் பணிபுரிவேன். இவ்விருதினை என் தாயாருக்கும், குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

மேலும் என்னுடன் இணைந்து இவ்விருதினை பெற்ற பேராசிரியர் சி.என்.ஆர்.ராவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் இணைந்து நான் விருது பெற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் விஞ்ஞானிகள் ஆவதற்கு அவர் ஒரு ஊக்க சக்தியாக விளங்குகிறார். அவர் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி