செய்திகள்,திரையுலகம் தனுஷுடன் சம்பளம் வாங்காமல் ஆடிய சிவகார்த்திகேயன்!…

தனுஷுடன் சம்பளம் வாங்காமல் ஆடிய சிவகார்த்திகேயன்!…

தனுஷுடன் சம்பளம் வாங்காமல் ஆடிய சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘எதிர்நீச்சல்’. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் முக்கியமான ஒன்றாகும்.

இப்படத்தையடுத்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.இப்படத்தின் விளம்பரத்திற்காக தனுஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இது அனைவர் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டது.

இதற்கு பிரதிபலனாக தனுஷ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அனிருத்தும் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த பாடலின் நடனமாடுவதற்கு இருவரும் சம்பளம் ஏதும் வாங்கவில்லையாம்.‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை ஒளிப்பதிவாளர் கே.வேல்ராஜ் இயக்கி வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி