செய்திகள்,முதன்மை செய்திகள் மகளின் கருவை கலைக்க போராடும் தாய்…

மகளின் கருவை கலைக்க போராடும் தாய்…

மகளின் கருவை கலைக்க போராடும் தாய்… post thumbnail image
அர்ஜண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தார்.

முதல் கணவர் மூலம் பிறந்த தனது 14 வயது மகளையும் தன்னுடன் வைத்து அவர் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வெளியே சென்றிருந்தபோது குடிபோதையில் இருந்த அவரது கள்ளக்காதலன் உறவு முறைகளைப் பற்றி சிந்தித்து பார்க்க முடியாத நிதானம் தவறிய நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த சிறிமியை கற்பழித்து விட்டார்.

தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக அந்த பெண் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை நாடினார். இங்கு கருக்கலைப்பு என்பது கொடிய குற்றமாக கருதப்படுகிறது.எனவே, அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்து விட்ட டாக்டர், ‘கோர்ட்டிடம் இருந்து அனுமதி வாங்கி வந்தால் கருக்கலைப்பு செய்ய தயார்’ என்று தெரிவித்தார். இதனையடுத்து, சால்டோ நகரின் குடும்ப கோர்ட்டில் தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அந்த பெண் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டர் சோரியா, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார். கருவை கலைத்துக் கொள்வதற்கான மனுதாரரின் உரிமையை விட, இன்னும் இந்த பூமியை பார்த்திராத அந்த கருவின் வாழ்வுரிமை தனக்கு பெரிதாக தெரிவதாக தெரிவித்த நீதிபதி, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார்.இந்த தீர்ப்பை கேட்டு கொதித்துப் போன சிறுமியின் தாயார் ‘எனது மகள் தேவை இல்லை என்று கருதும் ஒரு கருவை இன்னும் 8 மாதம் அவள் வயிற்றில் சுமந்திருந்து, பிள்ளையாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி கூறுவது கொடுமையான தீர்ப்பாக உள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி