திரையுலகம் நான் போடறது மட்டும் 420 இல்ல. நானே 420தான் – சங்கீதா

நான் போடறது மட்டும் 420 இல்ல. நானே 420தான் – சங்கீதா

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

நரேன், பூனம் பஜ்வா நடிக்கும் படம் ‘தம்பிக் கோட்டை, இதில் நடிகை சங்கீதா நீலாம்பரி வேடத்தில் நடிக்கிறார்.
இது பற்றி டைரக்டர் அம்மு ரமேஷ் கூறியது:

கல்லூரி மாணவராக நரேன், பிளஸ்2 மாணவியாக பூனம் பஜ்வா நடிக்கின்றனர்.

தம்பிக்கோட்டை கிராமத்துக்கு சமூக சேவை செய்ய செல்லும் நரேனுக்கு பூனமுடன் காதல் மலர்கிறது. வழக்கமான காதலாக இது இருக்காது. இதில் சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு ஆகியோரின் காமெடி ஹைலைட்டாக இருக்கும். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். ஜோடியாக மீனா நடிக்கிறார்.

‘படையப்பா நீலாம்பரி போன்ற வில்லி வேடத்தில் சங்கீதா நடிக்கிறார். எப்போதும் 420 பீடாவை வாயில் போட்டு மென்று கொண்டிருக்கும் அவர், ‘நான் போடறது மட்டும் 420 இல்ல. நானே 420தான்” என அடிக்கடி சொல்வார். அவரது கேரக்டர் பேசப்படும் என டைரக்டர் நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி